முன்னாள் மனைவி மோனிகா மீது இசையமைப்பாளர் டி.இமான் வழக்கு


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 4 April 2022 3:34 PM IST (Updated: 4 April 2022 3:34 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இசையமைப்பாளர் டி.இமான் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தனது மனைவியும் தானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இமானின் விவாகரத்து அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தற்போது இமான் தன்னுடைய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த புகாரில் அவர், தன்னுடைய குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதாகவும் அவருடைய மனைவி அதை மறைத்து, முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த கோர்ட்டு, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா  இதுகுறித்து பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story