சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்காக இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷாவுக்கு கிராமி விருது..!


சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்காக இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷாவுக்கு கிராமி விருது..!
x
தினத்தந்தி 4 April 2022 10:17 PM IST (Updated: 4 April 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

‘எ கலர்புல் வோர்ல்டு’ ஆல்பத்திற்காக இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷா கிராமி விருது பெற்றார்.

லாஸ் வேகாஸ்,

இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. 

இந்த விழாவில்,  சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை, ‘எ கலர்புல் வோர்ல்டு’ ஆல்பத்திற்காக இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷா பெற்றார்.

சிறந்த குழந்தைகளுக்கான  இசை ஆல்பம் பிரிவில் 2 முறை கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரே பெண்மணி, ‘பாலு’ என்றழைக்கப்படும் பால்குனி ஷா ஆவார். அவர் ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராமில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார்.

“இன்றைய மாயாஜாலத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிராமி பிரீமியர் விழாவின் தொடக்க பாடலை நிகழ்த்துவது எவ்வளவு பெரிய மரியாதை..

‘எ கலர்புல் வோர்ல்டு’ ஆல்பத்தில் பணியாற்றிய அனைத்து நம்பமுடியாத மக்களின் சார்பாக ஒரு சிலையை(கிராமி விருதை) வீட்டிற்கு எடுத்துச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது” என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மகத்தான அங்கீகாரத்திற்காக ரெக்கார்டிங் அகாடமிக்கு நாங்கள் பணிவுடன்  நன்றி கூறுகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், அவர் விருது நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பையும் பகிர்ந்துள்ளார்.

Next Story