ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு


ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 May 2022 10:51 PM IST (Updated: 17 May 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

2டி தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த 'ஜெய் பீம்' படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி பலத்த பாராட்டைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Next Story