கிராண்ட் பிளவரின் கழுத்தில் யூனுஸ்கான் கத்தியை வைத்ததற்கு பின்னணியில் அசாருதீன்...?


கிராண்ட் பிளவரின் கழுத்தில் யூனுஸ்கான் கத்தியை வைத்ததற்கு பின்னணியில் அசாருதீன்...?
x
தினத்தந்தி 6 July 2020 10:37 AM IST (Updated: 6 July 2020 3:58 PM IST)
t-max-icont-min-icon

கிராண்ட் பிளவரின் கழுத்தில் யூனுஸ்கான் கத்தியை வைப்பதற்கு பின்னணியில் அசாருதீன் கூட இருக்கலாம் என ரஷித் லத்தீப் கூறினார்.


இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக 2014- ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிராண்ட் பிளவர் இருந்தார்.

கிராண்ட் பிளவர் பாகிஸ்தான் அணி வீரர்களுடனான அனுபவம் குறித்து உரையாடும் போது  பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனுஸ்கானை ஹேண்டில் செய்வது கடினமாக இருந்தது. 2016- ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில், காலை உணவின் போது, நான் அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினேன். அதை கண்டுகொள்ளாத யூனுஸ்கான் என் கழுத்தின் மீது கத்தியை வைத்தார். அப்போது, மிக்கி ஆர்தர் அருகிலிருந்தார். பின்னர், அவர் இந்த விஷயத்தில் தலையிட்டு சமாதானம்  என்று கூறியிருந்தார்.

கிராண்ட் பிளவரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ள அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், ''யூனுஸ்கான் டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து கிராண்ட் பிளவரின் கழுத்தில் வைத்தார். நான் அவரை கூல் செய்தேன்'' என தெரிவித்திருக்கிறார். 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீப் லத்தீப், '' யூனுஸ்கான் அப்படி நடந்து கொள்வதற்கு பின்னணியில் அசாருதீன் இருந்திருக்கலாம். 2016- ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் யூனிஸ்கான் இரட்டை சதம் அடித்தார். அப்போது, பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. மாறாக தான் பேட்டிங் செய்ய கஷ்டப்படும் போது, அசாருதீனுடன் பேசினேன்.அவர் சில அறிவுரைகளை எனக்கு வழங்கினார்.

 கிராண்ட் பிளவரின் கழுத்தில் யூனுஸ்கான் கத்தியை வைப்பதற்கு அசாருதீன் கூட பின்னணியில் இருக்கலாம் . பேட்டிங் கோச்சாக இருக்கும் ஒருவரை விட மற்றோருவரின் பெயரை குறிப்பிடுவது யோசிக்க வேண்டிய விஷயம் '' என்று கூறி உள்ளார்.

Next Story