தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:27 AM IST)
t-max-icont-min-icon

தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

தா.பேட்டை,

தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங் களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த காருகுடி கிராமத்தில் உள்ள முதலியார் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போதிய அளவு குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால், காருகுடி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிதாக குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் பிடித்து வந்துள்ளனர். ஆனால் புதிதாக போடப்பட்ட குடிநீர் குழாயை அகற்ற வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காருகுடியில் பஸ் செல்லும் முக்கிய சாலையில், நேற்று காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சையத்சுல்தான்மக்தூம், திட்ட ஆணையர் பத்மஜோதி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காருகுடி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.



Next Story