திருட்டு சி.டி. தயாரிக்க சினிமா படத்தை பதிவு செய்து கொடுத்த தியேட்டர் மேலாளர் உள்பட 2 பேர் கைது தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

திருட்டு சி.டி. தயாரிக்க சினிமா படத்தை பதிவு செய்து கொடுத்த தியேட்டர் மேலாளர் உள்பட 2 பேர் கைது தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:32 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு சி.டி. தயாரிக்க சினிமா படத்தை பதிவு செய்து கொடுத்த தியேட்டர் மேலாளர் உள்பட 2 பேர் கைது தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

அரக்கோணம்,

அரக்கோணத்தில், சினிமா படத்தை திருட்டு சி.டி. தயாரிக்க பதிவு செய்து கொடுத்த தியேட்டர் மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

நடிகர் ஜீவா நடித்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இந்த படம் திரையிடப்பட்ட சில நாட்களிலேயே அதன் திருட்டு சி.டி. தாராளமாக ஆங்காங்கே கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர், சேலத்தில் புதுப்பட சி.டி., டி.வி.டி. தயாரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சி.டி.யை வைத்து விசாரணை நடத்திய போது டிஜிட்டலில் உள்ள நுணுக்கங்களை வைத்து சி.டி. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஒரு தியேட்டரில் வைத்து பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்பிரிவு போலீசார் நேற்று அரக்கோணம், பழனிப்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

2 பேர் கைது

விசாரணையில், தியேட்டர் மேலாளர் முரளி (வயது 38), ஆபரேட்டர் டில்லிபாபு (40) ஆகியோர் தியேட்டரில் கேமரா மூலமாக ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தை பதிவு செய்து கொடுத்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, தியேட்டரில் இருந்து சில கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story