ஓசூர் அருகே அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதல் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்


ஓசூர் அருகே அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதல் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதல் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்

ஓசூர்,

ஓசூர் அருகே அடுத்தடுத்து 7 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

சங்கிலி தொடர் விபத்து

ஓசூர் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் குஷ்மா. இவர் காவேரிப்பட்டணம் அருகே உள்ள வேலம்பட்டியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். மாலை அவர் காரில் ஓசூர் நோக்கி திரும்பி கொண்டிருந்தார். காரில் உறவினர்கள் 3 பேர் இருந்தனர். ஓசூர் அருகே சூளகிரி பக்கமுள்ள அலகுபாவி பக்கமாக கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்ற மற்றொரு கார், வேறு ஒரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது. அந்த நேரம் குஷ்மா ஓட்டிச் சென்ற கார் முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது. இதில் விபத்தில் சிக்கிய அந்த மற்றொரு கார், பெங்களூரு நோக்கி சென்ற பஸ்சின் பக்கவாட்டில் மோதியது. இதில் அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி மறுபக்க ரோட்டில் பாய்ந்தது.

இந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற இன்னொரு காரின் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் கார் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. ஒரே நேரத்தில் கார்கள், பஸ், லாரி, மோட்டார் சைக்கிள்கள் என 7 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் அங்கு சென்று விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story