நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:33 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஓய்வூகால பணபலன்கள் வழங்கப்படாததை கண்டித்தும், உடனடியாக அதனை வழங்கக்கோரியும் நேற்று காலை நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள போக்குவரத்துக்கழக மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர்கள் தங்கப்பன், பத்மநாபன், வில்லியம் போஸ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர்கள் சண்முகம், சைமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அய்யாத்துரை சிறப்புரையாற்றினார். முடிவில் ஆன்றனி நன்றி கூறினார்.


Next Story