ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் தீர்ந்து போனதால் பொதுமக்கள் சாலை மறியல்

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் தீர்ந்து போனதால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Dec 2016 4:47 AM IST (Updated: 21 Dec 2016 4:47 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி எச்.வி.எப். சாலையில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நேற்று காலை வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் தீர்ந்துவிட்டது.

ஆவடி,

இதனால் நீண்ட நேரமாக வரிசையில் நின்றவர்கள் ஆத்திரம் அடைந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பக்கோரி எச்.வி.எப். சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story