காதலனை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதலனை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Dec 2016 4:52 AM IST (Updated: 21 Dec 2016 4:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கே.கே.நகரில் காதலனை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை கே.கே.நகரில் காதலனை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணம் செய்ய மறுப்பு

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் அனிதா (வயது 18). இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அனிதா கடந்த சில வருடங்களாக அவரது உறவினர் மருது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் திடீரென மருதுவின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை திருமணம் செய்ய அனிதா மறுத்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அனிதா, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால், அனிதாவின் பெற்றோர் அவரை தேடிக்கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். மேலும், அனிதாவுக்கு, மருதுவை திருமணம் செய்துவைப்பதற்காக அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அனிதா ‘நான் காதலித்தவரை தவிர வேறு யாருடனும் வாழ மாட்டேன்’ என்று பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார். அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் நேற்று முன்தினம் அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story