தாம்பரம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி டிரைவர் கைது


தாம்பரம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2016 4:53 AM IST (Updated: 21 Dec 2016 4:53 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.

தாம்பரம்,

தாம்பரம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.

நண்பருடன் சென்றார்

குரோம்பேட்டை சி.எல்.சி. ஒர்க்ஸ் சாலையை சேர்ந்தவர் கந்தன் (வயது 24). கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் தேவா (எ) தேவராஜ், (24). பூ அலங் காரம் செய்து வருகிறார்.

கந்தன், தேவா இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். கந்தன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார்.

தாம்பரம் பஸ் நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் கந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேவா சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பார்த்திபன் (26) என்பவரை கைது செய்தனர்.

மேலும், இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story