எண்ணூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
ஒழுங்காக படிக்கும்படி பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
ஒழுங்காக படிக்கும்படி பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கண்டிப்பு
எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் மல்லை நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் அபிகணேஷ் (வயது 21). பொன்னேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
அபிகணேஷ் படிப்பில் பின்தங்கி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அபிகணேஷின் பெற்றோர் அவரிடம் சரியாக படிக்குமாறு அறிவுறுத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் காலை அபிகணேஷின் பெற்றோர் ஒழுங்காக படிக்குமாறு அவரை கண்டித்தனர். இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த அபிகணேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அபிகணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story