அணைக்கட்டு தாலுகாவில் 100 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதியில்லாத மலை கிராமங்கள் கலெக்டர் ராமன் நடந்து சென்று ஆய்வு செய்தார்
அணைக்கட்டு தாலுகாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கலெக்டர் ராமன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதியில்லாத மலை கிராமங்கள் அணைக்கட்டு தாலுகா, ஊசூர்
அடுக்கம்பாறை
அணைக்கட்டு தாலுகாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கலெக்டர் ராமன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அடிப்படை வசதியில்லாத மலை கிராமங்கள்அணைக்கட்டு தாலுகா, ஊசூர் அருகே குருமலை என்ற மலை கிராமம் உள்ளது. இந்த குருமலை கிராமத்தை ஒட்டி வெள்ளைக்கல் மலை மற்றும் நச்சிமேடு ஆகிய மலை கிராமங்களும் உள்ளது. குருமலை, வெள்ளைக்கல் மலை, நச்சிமேடு ஆகிய 3 மலை கிராமங்களிலும் சுமார் 400–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், ஊசூர், அத்தியூர், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கூலி வேலை செய்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இந்த மலைவாழ் மக்களுக்கு இதுவரை சாலை வசதி அமைத்து தரவில்லை.
படிப்பை தொடரமுடியாத நிலைஇரண்டு சக்கர வாகனங்கள் கூட செல்ல லாயக்கற்ற நிலையில், சுமார் 2 ஆயிரம் அடி உயரம் உள்ள மலை உச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நடந்தே செல்கின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் ஊசூர், அத்தியூர், சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தபடியே, நடைபயணமாக மலை உச்சிக்கு கொண்டு செல்கின்றனர்.
இருச்சக்கர வாகனம் மற்றும் டிராக்டர் செல்லும் அளவுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என மலை கிராம மக்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். குருமலையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் 8–ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பு படிக்க மாணவர்கள் ஊசூர் மற்றும் அணைக்கட்டு பகுதிக்குதான் வரவேண்டும்.
குண்டும், குழியுமாய் சாலை இருப்பதாலும், அடர்ந்த வனப்பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதாலும் மாணவர்கள் தங்கள் மேல் படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வுமலையில் வசிப்பவர்களுக்கு திடீர் காய்ச்சலோ அல்லது பிரசவ வலியோ ஏற்பட்டால் அந்த பகுதி மக்கள் போர்வையை கொண்டு, ‘டோலி’ கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இதுபோன்ற சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் உண்டு. எனவே குருமலை பகுதிக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என மலை கிராம மக்கள் தலைமுறை, தலைமுறையாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், வேலூர் வனச்சரகர் குமார், வனவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நேற்று காலை 6 மணி அளவில் குருமலை மலை கிராமத்திற்கு ஆய்வு பணிக்கு சென்றனர். அவர்கள் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்கள் கோரிக்கைமுதலில் குருமலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் விவரம், சமையலறை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். குருமலை பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் கிணற்றை ஆய்வு செய்து, குடிநீர் வினியோகம் செய்யப்படும் முறைகள் குறித்து கேட்டார். மேலும் மலையில் கட்டப்பட்டுள்ள இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள், அங்கன்வாடி கட்டிட பணி உள்ளிட்டவைகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ரேஷன் கடைஅப்போது அந்த கிராம பெண்கள் குருமலை பகுதிக்கு சாலை வசதி, மருத்துவ வசதி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, ரேஷன் கடை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை வலுப்படுத்த மாங்காய், தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் அழுதபடி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கலெக்டர் ராமன், விரைவில் குருமலைக்கு சாலை வசதி அமைத்து தருவதுடன் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது பொதுமக்கள் ‘கிராம நிர்வாக அலுவலரிடம், முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலர் எங்களை அலட்சிய படுத்துகிறார்’ என கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். உடனே கலெக்டர் ‘உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
கிராம நிர்வாக அலுவலர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.