மொடக்குறிச்சியில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மொடக்குறிச்சியில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:45 AM IST (Updated: 22 Dec 2016 12:34 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, ஆண்டு ஊதிய உயர்வு உள்பட மாதம் ரூ.4,800 சம்பளம் வழங்கவேண்டும். ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் 3 ஆண்டு பணி நிறைவு செ

மொடக்குறிச்சி

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, ஆண்டு ஊதிய உயர்வு உள்பட மாதம் ரூ.4,800 சம்பளம் வழங்கவேண்டும். ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் 3 ஆண்டு பணி நிறைவு செய்த நாள் முதல் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் என்.வடிவேல், துணைத்தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஈ.வி.கே.சண்முகம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 15 பெண்கள் உள்பட 60–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.


Next Story