டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை: 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை
தேனி அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழியரை தாக்கி கொள்ளை தேனி அருகே உள்ள தர்மாபுரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் தர்மாபுரியில் இருந்து
தேனி,
தேனி அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊழியரை தாக்கி கொள்ளைதேனி அருகே உள்ள தர்மாபுரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் தர்மாபுரியில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 19–ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு, மதுவிற்பனை செய்த பணம் ரூ.77 ஆயிரத்து 766–ஐ எடுத்துக் கொண்டு தனது உறவினர் கணபதி என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
தர்மாபுரி ஓடை அருகே வந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் மணிகண்டன் மீதும், கணபதி மீதும் மிளகாய் பொடியை தூவினர். மேலும், மணிகண்டன் கையில் கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
2 பேரிடம் தீவிர விசாரணைஇந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஆண்டிப்பட்டி அருகே திருமலாபுரம் விலக்கு பகுதியில் போலீசாரை பார்த்த கொள்ளையர்கள் ஒரு மோட்டார் சைக்கிளையும், ரூ.77 ஆயிரத்து 766 பணத்தையும் போட்டுச் சென்று விட்டனர். அதனை போலீசார் கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த மோட்டார் சைக்கிள் தேனி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் அல்லிநகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட 2 பேரிடமும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாருக்கு பாராட்டு
தர்மாபுரியில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்ட போது, ஆண்டிப்பட்டி அருகே திருமலாபுரம் விலக்கு பகுதியில் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், மோட்டார் சைக்கிளையும், பணத்தையும் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் போலீசார் துரத்திச் சென்ற போதிலும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இந்த தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளையடித்த பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், அவருடைய வாகன டிரைவர் கண்ணன், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ரோந்து வாகன டிரைவர் ராசு, போலீஸ்காரர் ராம்குமார் ஆகிய 5 பேரையும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு வெகுமதி வழங்கி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார்.