டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
குடும்ப தகராறில் மனமுடைந்ததால் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, மின்கம்பியை பிடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:– மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள டி.வாடிப்பட்டிய
தேவதானப்பட்டி,
குடும்ப தகராறில் மனமுடைந்ததால் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, மின்கம்பியை பிடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவுதேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 44). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் பாண்டி வீட்டு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன்– மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் பாண்டி மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் சாலையோரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது பாண்டி ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய உடல் டிரான்ஸ்பார்மர் மீது தொங்கிய நிலையில் கிடந்தது.
உடல் மீட்புஇதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின்சாரத்தை துண்டித்தனர். இதைத் தொடர்ந்து டிரான்ஸ்பார்மரில் இருந்து அவருடைய உடலை மீட்டு தீயணைப்பு படைவீரர்கள் கீழே கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயமங்கலம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.