திருமண உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் கலெக்டர் தகவல்


திருமண உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 12:42 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையானது, பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மின்னனுதீர்வை (இ.சி.எஸ்.) மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த, தகுதியுடைய பயனாளிகள் தங்களது

தேனி

தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையானது, பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மின்னனுதீர்வை (இ.சி.எஸ்.) மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த, தகுதியுடைய பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு விவரத்தினை உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரிடம் வழங்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கி வங்கி கணக்கு புத்தக நகலை சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவல் தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story