பந்தலூர் அருகே யானையின் அட்டகாசத்தால் தென்னை மரம் வீட்டின் மீது விழுந்தது அதிர்ஷ்டவசமாக தொழிலாளி குடும்பத்தினர் உயிர் தப்பினர்


பந்தலூர் அருகே யானையின் அட்டகாசத்தால் தென்னை மரம் வீட்டின் மீது விழுந்தது அதிர்ஷ்டவசமாக தொழிலாளி குடும்பத்தினர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:45 AM IST (Updated: 22 Dec 2016 1:01 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. மரம் சரிந்து வீட்டின் மீது விழுந்தது பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே ஓர்கடவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஆதிவாசி குடியி

பந்தலூர்

பந்தலூர் அருகே மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

மரம் சரிந்து வீட்டின் மீது விழுந்தது

பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே ஓர்கடவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஆதிவாசி குடியிருப்புகளை விடிய, விடிய முற்றுகையிட்டது. மேலும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான மாதி என்ற பெண் வீட்டின் அருகே நின்றிருந்த தென்னை மரத்தை முட்டி தள்ளியதில் மரம் வீட்டின் மீது விழுந்தது.

அப்போது வீட்டில் இருந்த மாதி குடும்பத்தினர் பயத்தில் அலறினர். மேலும் அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீப்பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காட்டு யானை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் வீட்டுக்குள் தவித்து கொண்டிருந்த மாதி குடும்பத்தினரை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம்

இதேபோல் பாட்டவயல் அருகே சந்தனசிரா பகுதியில் 5 காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன், பத்மநாதன், மாதவன், விஜயன், குஞ்சு குட்டன், சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான பல விவசாய தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்தன.

பின்னர் அங்கு பயிரிட்ட தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இது குறித்து பிதிர்காடு வனத்துறையினருக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் வனவர் பத்மநாதன், வன காப்பாளர் ராஜேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் மதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காட்டு யானைகள் அப்பகுதிக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.


Next Story