வங்கி, நிதிநிறுவனங்களில் இருந்து நுண்கடன் பெற்றவர்களுக்கு கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்.டி.ஓ.விடம் மனு


வங்கி, நிதிநிறுவனங்களில் இருந்து நுண்கடன் பெற்றவர்களுக்கு கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்.டி.ஓ.விடம் மனு
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 1:28 AM IST)
t-max-icont-min-icon

வங்கி, நிதிநிறுவனங்களில் இருந்து நுண்கடன் பெற்றவர்களுக்கு கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று திருப்பூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்.டி.ஓ.விடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். நுண்கடன் பெற்றவர்களுக்கு... மார்க்சிஸ்ட் க

திருப்பூர்,

வங்கி, நிதிநிறுவனங்களில் இருந்து நுண்கடன் பெற்றவர்களுக்கு கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று திருப்பூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்.டி.ஓ.விடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

நுண்கடன் பெற்றவர்களுக்கு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் பழனிச்சாமி மற்றும் வாவிபாளையம், குருவாயூரப்பன்நகர், செரங்காடு, கணக்கம்பாளையம், படையப்பாநகர், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கி, நிதி நிறுவனங்களில் இருந்து நுண்கடன் பெற்ற சுய உதவிக்குழு பெண்கள் உள்பட ஏராளமானோர் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஆர்.டி.ஓ. ஷ்ரவன் குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசீர்வாதம், ஐ.ஏ.எஸ்.இ., ஆராதனை, கிராமசக்தி, ஜனலட்சுமி, ஜீவன், ஹெச்.டி.எப்.சி., எக்விடாஸ், முத்தூட், பெஸ்ட், மதுரா ஆகிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து வாவிபாளையம், குருவாயூரப்பன்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300–க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு பெண்கள் நுண்கடன் பெற்றுள்ளனர். நவம்பர் 8–ந்தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அவகாசம் வழங்க வேண்டும்

இந்த அறிவிப்பை தொடர்ந்து சுய உதவிக்குழு பெண்கள் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நிறுவனங்களில் இருந்து நுண்கடன் பெற்றவர்களுக்கும் தவணை செலுத்துவதில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக கால அவகாசம் கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்திருந்தோம்.

ஆனால், நுண்கடன் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினமும் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று தவணை தொகையை செலுத்தும்படி வற்புறுத்துகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளை பேசி மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இதனால் கடன் தவணையை செலுத்த கால அவகாசம் அளித்து பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


Next Story