மின்சாரம் வழங்கக்கோரி மறியல்


மின்சாரம் வழங்கக்கோரி மறியல்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:15 AM IST (Updated: 22 Dec 2016 2:35 AM IST)
t-max-icont-min-icon

வார்தா புயலால் கடந்த 12–ந்தேதி மின்கம்பங்கள் சேதம் அடைந்த மீஞ்சூர் பேரூராட்சி கலைஞர் நகர் பகுதியில் நேற்று வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை. தங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறி

மீஞ்சூர்,

வார்தா புயலால் கடந்த 12–ந்தேதி மின்கம்பங்கள் சேதம் அடைந்த மீஞ்சூர் பேரூராட்சி கலைஞர் நகர் பகுதியில் நேற்று வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை. தங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story