நண்பன் இறந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை வில்லிவாக்கத்தில் நண்பன் இறந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி மாணவர் சென்னை வில்லிவாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், கார்த்திகேயன்
செங்குன்றம்
சென்னை வில்லிவாக்கத்தில் நண்பன் இறந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர்சென்னை வில்லிவாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், கார்த்திகேயன் (வயது 18) என்ற மகனும் உள்ளனர். நந்தகோபால், அவரது மனைவி, மகள் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். கார்த்திகேயன் முகப்பேரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திகேயனின் நண்பர் அரவிந்த் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கார்த்திகேயன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
‘யாரும் காரணம் இல்லை’இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கார்த்திகேயன் நேற்று மாலை படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு இருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் ‘என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என் நண்பன் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன்’ என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து கார்த்திகேயனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.