ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 54 ஆயிரம் வடை மாலை அணிவிக்கப்படுகிறது தயாரிக்கும் பணி தீவிரம்


ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 54 ஆயிரம் வடை மாலை அணிவிக்கப்படுகிறது தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Dec 2016 2:40 AM IST (Updated: 22 Dec 2016 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 54 ஆயிரம் வடை மாலை அணிவிக்கப்படுகிறது தயாரிக்கும் பணி தீவிரம்

நாமக்கல்,

ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 54 ஆயிரம் வடைகளை கொண்ட மாலை அணிவிக்கப் படுகிறது. இவற்றை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சம் வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

54 ஆயிரம் வடைகள்

இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பக்தர்கள் சார்பில் ஆஞ்சநேயருக்கு 54 ஆயிரம் வடைகள் கொண்ட மாலை அணிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வடைகள் தயாரிக்கும் பணியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 1,400 கிலோ உளுந்து, 600 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்பட இருப்பதாக வடைமாலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த பணி முடிவடைந்த பிறகு வடைகள் மாலையாக கோர்க்கப்பட்டு, ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று சாமிக்கு அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும் எனவும், பின்னர் இந்த வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story