தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான தொழில்முனைவோர் திட்டங்கள் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி,
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில்முனைவோர்
தமிழக அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை மேற்கொள்வது மட்டுமின்றி தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் சமூக மக்களை தொழில்முனைவோராக உயர்த்தும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிதிராவிடர்கள் தங்களுக்கு தெரிந்த, விருப்பமான, முன் அனுபவம் உள்ள தொழில்களை புரிந்து வருவாய் ஈட்டி பயன்பெறும் வகையில் தொழில்முனைவோர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 65 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். கடன் கோரும் விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இதுவரை தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருக்ககூடாது. இந்த திட்டத்தின் கீழ் தொடங்க உத்தேசித்துள்ள தொழிலை விண்ணப்பதாரரே தேர்வு செய்ய வேண்டும்.
தொடர்பு கொள்ளலாம்
இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்து, விண்ணப்பதாரர் பெயரில் மட்டுமே இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கடன் பெற்ற மாவட்டத்திலேயே தொழிலை நடத்த வேண்டும். கால்நடை வளர்ப்பு தொடர்பான தொழிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் வாங்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை மருத்துவ தகுதிச்சான்றிதழ் ஆகியவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள கால்நடை பாரமரிப்புத்துறை அலுவலர் அல்லது அரசு கால்நடை டாக்டரிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பால்பண்ணை தொழில்களுக்கு ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். மலர் நிலையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தாட்கோ மாவட்ட மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Next Story