திருச்செந்துறை வணிக வளாகத்தில் 254 வாழைத்தார்கள் ஏலம் கலெக்டர் தகவல்


திருச்செந்துறை வணிக வளாகத்தில் 254 வாழைத்தார்கள் ஏலம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2016 2:41 AM IST (Updated: 22 Dec 2016 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்துறை வணிக வளாகத்தில் 254 வாழைத்தார்கள் ஏலம் கலெக்டர் தகவல்

திருச்சி,

திருச்செந்துறை வணிக வளாகத்தில் 254 வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் பழனிசாமி கூறி உள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாழைத்தார்கள் ஏலம்

வேளாண்மை விற்்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ், திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள வாழை வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் வாழைத்தார்் பொதுஏலம் நடைபெற்றது. கிளியநல்லூர், அம்மன்குடி ஆகிய கிராமங்களிலிருந்து 5 விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். மொத்தம் 254 வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டன. ரூ.13ஆயிரத்து 335 மதிப்பிற்கு ஏலம் நடைபெற்றது. ரஸ்தாலிதார் அதிகபட்சமாக ரூ.175-க்கும், பச்சலாடன்தார் அதிகபட்சமாக ரூ.150-க்கும் பூவன்தார் அதிகபட்சமாக ரூ.120-க்கும் ஏலம் போனது. நல்ல தரமான வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து எவ்வித கட்டணமோ, கமிஷனோ வசூலிக்கப்படுவதில்லை. விவசாயிகளுக்கு உரியபணம் அன்றே பட்டுவாடா செய்யப்பட்டது. வாழை விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அதிக வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைய வேண்டும்.

வருகிற 27-ந் தேதி

பழனி, திண்டுக்கல், லாலாபேட்டை, ஜீயபுரம் மற்றும் குழுமணி ஆகிய ஊர்களில் இருந்து மொத்தம் 6 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அடுத்த ஏலம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெறும். இந்த பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாழைத்தார்களை ஏலம் எடுக்க வியாபாரிகளுக்கும்் அறிவிக்கப்படு கிறது.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Next Story