அய்யப்ப பக்தர்கள் தீக்குழி இறங்கும் விழா


அய்யப்ப பக்தர்கள் தீக்குழி இறங்கும் விழா
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 2:41 AM IST)
t-max-icont-min-icon

அய்யப்ப பக்தர்கள் தீக்குழி இறங்கும் விழா

மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வருடந்தோறும் கார்த்திகை முதல் தேதி மாலையிட்டு விரதமிருந்து இரு முடி கட்டி தீ மிதித்து சபரிமலை செல்வது வழக்கம். அதன்படி 22-வது ஆண்டாக இந்த ஆண்டு தீ மிதி விழா நடைபெற்றது. இதற்காக அய்யம்பாளையம் கீழுர் மாரியம்மன் கோவில் முன்பாக தீக்குண்டம் அமைக்கப்பட்டது. மாலை அணிந்த பக்தர்கள் அருகில் உள்ள ஒரு கோவிலில் அபிஷேகம் செய்து பக்தர்கள் மேள தாளத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். மாரியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் வரிசையாக அய்யப்ப சரணகோஷம் முழங்க தீக்குழி இறங்கினர். பின்னர் மாரியம்மன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

Next Story