டி.முருங்கப்பட்டி வெடி விபத்து: பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிவாரண உதவி பெற மறுப்பு கைக்குழந்தைகளுடன் பெண்கள் கதறல்; துறையூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

துறையூர்,
டி.முருங்கப்பட்டி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிவாரண உதவி பெற மறுத்தனர். மேலும் கைக்குழந்தைகளுடன் பெண்கள் கதறி அழுத சம்பவம் துறையூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடி விபத்து
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த டி.முருங்கப்பட்டி வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 1-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். இவர்களில் 13 பேர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று துறையூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி.க்கள் மருதராஜா, ரத்தினவேல், திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்தனர்.
பெண்கள் கதறல்
அப்போது வெடி விபத்தில் உறவினர்களை பறிகொடுத்த பெண்கள் கதறி அழுதனர். மேலும் “இந்த தொகை எங்களுக்கு போதாது? இந்த தொகையை நாங்கள் வாங்கி விட்டால் எங்கள் வீட்டுக்காரர் வந்து விடுவாரா?” “எங்கள் கைகளில் இருக்கும் எங்கள் குழந்தைகளின் அப்பா வந்து விடுவாரா?” என்று கேட்டு கதறி அழுதனர். இதனை பார்த்து அவர்களுடன் வந்திருந்தவர்களும் இந்த நிவாரண தொகையை வாங்க மாட்டோம் என்று கூறி சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் மாவட்ட கலெக்டர் பழனிசாமி பேசினார்.
அப்போது, உங்களுக்கு இந்த தொகையை கழிக்க மாட்டார்கள், உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். கூடுதல் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்து ஆறுதல் கூறினார். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிவாரண நிதி உதவி பெற சம்மதம் தெரிவித்தனர்.
நிவாரண தொகை
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. அதன்படி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த கீதா, காந்திமதி, கனகேஸ்வரி, ராஜசேகர், சரஸ்வதி, ரம்யா, ராஜாமணி, அம்சவள்ளி, லோகேஸ்வரி, ஜெயா, வளர்மதி, யோகலட்சுமி, சாந்தி ஆகிய 13 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கப்பட்டது.
விபத்தில் படுகாயம் அடைந்த வடிவேலன், விக்னேஸ்வரன், சந்திரா, பாப்பாத்தி, விஜயகாந்த் ஆகிய 5 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் விபத்தில் காயம் அடைந்த கார்த்திகேயன், பாலசுப்பிரமணியன், ஆனந்தன், பழனிவேல், மணி, சங்கர், செல்வம் ஆகிய 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், முசிறி கோட்டாட்சியர் ஜானகி, துறையூர் தாசில்தார் ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நிவாரண தொகையை பெற்றுக்கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story