மாமல்லபுரத்தில் வங்கியில் பணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


மாமல்லபுரத்தில் வங்கியில் பணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:42 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் வங்கியில் பணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணம் இல்லை மாமல்லபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தற்போது இந்த வங்கிக்கு ரிசர்வ்

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் வங்கியில் பணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணம் இல்லை

மாமல்லபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தற்போது இந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து 3 நாளைக்கு ஒரு முறை ரூ.10 லட்சம் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து போதிய பணம் வழங்க முடியவில்லை என்று வங்கி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படுகிறது.

அடிக்கடி இணையதளசேவை பழுதாவதாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் வழங்க முடியவில்லை என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வங்கியில் பணம் எடுக்க பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது பணம் இல்லாத காரணத்தால் வங்கியின் முன்பக்க கதவில் பணம் இல்லை என்ற அறிவிப்பு பலகை மாட்டப்பட்டது.

சாலை மறியல்

இதையடுத்து பல்வேறு தேவைகளுக்கு பணம் எடுக்க வந்து, விரிசையில் காத்து கொண்டிருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு பணம் வழங்கக்கோரி திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கமல தியாகராஜன், தாசில்தார் சீதா, பா.ம.க. நகர செயலாளர் ராஜசேகர் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பணம் வந்த உடன் உடனடியாக வினியோகிக்கப்படும் என்று வங்கி நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மேலும் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள ஒரே வங்கி என்பதால் ரிசர்வ் வங்கி அதிக பணம் அனுப்ப வேண்டும் என்றும், கூடுதல் பணியாளர்களை இந்த வங்கியில் பணியமர்த்தி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அப்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள், போலீசாரின் சமரசத்தை அடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story