இந்த ஆண்டு திருட்டு போன ரூ.1 கோடியே 5 லட்சம் பணம்- பொருட்கள் மீட்பு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்


இந்த ஆண்டு திருட்டு போன ரூ.1 கோடியே 5 லட்சம் பணம்- பொருட்கள் மீட்பு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:43 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு திருட்டு போன ரூ.1 கோடியே 5 லட்சம் பணம்- பொருட்கள் மீட்பு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கரூர்,

இந்த ஆண்டு திருட்டு போன ரூ.1 கோடியே 5 லட்சம் பணம்-பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கூறியுள்ளார்.

210 வழக்குகள் பதிவு

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு, அதாவது கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 21-ந்தேதி வரை கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்று மொத்தம் 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை 179 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் திருட்டுபோன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 17 கொலைகள் நடந்து உள்ளன. இவை தொடர்பாக 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

36 பேருக்கு தண்டனை

மேலும் திருட்டு போன 283¾ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. ரூ.8 லட்சத்து 24 ஆயிரத்து 460 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 6 கார், 49 மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல்வேறு திருட்டு போன வாகனங்கள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. அதன்படி திருட்டுபோன மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 12 ஆயிரத்து 290 பணம் மற்றும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கொலை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 36 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த ஆண்டு அதிக வழக்குகளை கண்டுபிடித்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை சூப்பிரண்டு கும்மராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story