புகளூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வள்ளியப்பம்பாளையம் விவசாயிகள் கலெக்டரிடம் மனு


புகளூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வள்ளியப்பம்பாளையம் விவசாயிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:43 AM IST)
t-max-icont-min-icon

புகளூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வள்ளியப்பம்பாளையம் விவசாயிகள் கலெக்டரிடம் மனு

கரூர்,

புகளூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வள்ளியப்பம்பாளையம் விவசாயிகள் கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுத்து உள்ளனர்.

கலெக்டரிடம் மனு

கரூர் மாவட்டம் வள்ளியப்பம்பாளையம் காவிரி நதி நீரேற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் நேற்று கலெக்டர் கோவிந்தராஜிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மண்மங்கலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிட்டு உள்ளோம். தற்போது கரும்பு வெட்டும் தருவாயில் உள்ளது. நாங்கள் அனைவரும் புகளூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டுவதாக பதிவு செய்து உள்ளோம். புகளூரில் உள்ள கரும்பு ஆலை நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் அரவையை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் அரவையை தொடங்க வில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த ஆலைக்கு சொந்தமான மற்றொரு ஊரில் உள்ள ஆலைக்கு கரும்பை வெட்டி கொண்டு செல்லுங்கள் என்று கூறுகின்றனர். இதனால் எங்களுக்கு அதிக செலவு ஆகும். எனவே, புகளூர் சர்க்கரை ஆலையிலேயே கரும்பு அரவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கரும்பு டன்னுக்கு ரூ.2,800 வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்ததை வழங்க வேண்டும். காப்பீடு என்ற திட்டத்தில் பணம் பிடித்தம் செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் கூறினார்.

Next Story