வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் கலெக்டர் கணேஷ் வலியுறுத்தல்


வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் கலெக்டர் கணேஷ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:43 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் கலெக்டர் கணேஷ் வலியுறுத்தல்

ஆவுடையார்கோவில்,

வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கணேஷ் வலியுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பல்வேறு பதிவேடுகள்

இதில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பதிவேடு, வருகைப்பதிவேடு, குடும்பத்தலைவர் மாற்றம் பதிவேடு, இறப்பு சான்று பதிவேடு, தற்செயல் விடுப்பு பதிவேடு, வருகைப்பதிவேட்டின் சுருக்கப்பதிவேடு, கோப்புகள் வழங்கும் பதிவேடு, அலுவலகப்பணியாளர்களின் காலமுறை ஊதிய உயர்வு பதிவேடு, இணையதளத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றுகள் பதிவேடு, நிலவரி வசூல் பதிவேடு, முன்கொணர் பகிர்மானப்பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் 7 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும், 12 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளும் வழங்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இந்த ஆய்வின் போது அலுவலகங்களில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரிக்கவும், அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், மேலும் பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் சான்றிதழ்களை தாமதமின்றி வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அனைவரும் உரிய முறையில் பெற்று பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் பவானி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story