பாபநாசம் தாலுகாவில் குடும்ப அட்டை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


பாபநாசம் தாலுகாவில் குடும்ப அட்டை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2016 2:44 AM IST (Updated: 22 Dec 2016 2:44 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் தாலுகாவில் குடும்ப அட்டை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

பாபநாசம்,

பாபநாசம் தாலுகாவில் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், அம்மாப்பேட்டை, மெலட்டூர் ஆகிய சரக பகுதிகளில் உள்ள கிராமங்களில் களப்பணியாளர்களான கிராம உதவியாளர்கள், வரி தண்டலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள், கூட்டுறவுத்துறை பணியாளர்கள் மற்றும் இதரத்துறை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடும்ப அட்டைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணியின்போது குடும்ப அட்டை எண், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், எரிவாயு இணைப்புகள் போன்றவை சரியாக உள்ளதா? எனவும், போலி அட்டைகள் இருக்கிறதா? எனவும் உள்பட அனைத்து முழு விவரங்களையும் பரிசீலித்து அதன் உண்மை தன்மையை பற்றி கணக்கெடுக்கும் பணியில் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகரன், பாபநாசம் கீழக்கஞ்சிமேடு பகுதியிலும், அய்யம்பேட்டை மேட்டுத்தெரு பகுதியிலும் நேரில் சென்று களப்பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

100 சதவீதம் முழுமையான விவரங்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Next Story