பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:44 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

பாபநாசம்,

பாபநாசம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

பாபநாசம் ஒன்றியம் பசுபதி கோவில் ஊராட்சியில் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் அருகே அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தினை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதே ஊராட்சியில் தனி நபர் கழிப்பறை கட்டும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொட ர்ந்து உம்பளப்பாடி ஊராட்சியில் மேட்டு தெரு கிராமத்தில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருமாள் கோவில் ஊராட்சியில் வன்னியடி கிராமத்தில் ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனி நபர் கழிவறை கட்டும் பணியினையும் பார்வையிட்டார்.

பாசன வாய்க்கால்

அதை தொடர்ந்து பாபநாசம் பேரூராட்சியில் பாலாஜி நகரில் மனைப்பிரிவு அனுமதி அளிப்பது தொடர்பான இடத்தினை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள பாசன வாய்க்காலை பார்வையிட்டு, உடனடியாக வாய்க்காலை சீரமைக்க உத்தரவிட்டார். பின்னர் பாபநாசம் ரெயில்வே நிலை சாலையில் அய்யம்பேட்டை முருகன் கோவில் தெருவில் குடும்ப அட்டை முழு விவரம் எடுக்கும் களப்பணியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அய்யம்பேட்டையில் ஒரு நெசவாளர் வீட்டிற்கு சென்று தறி நடைபெறும் பணியினை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் மந்திராசலம், பேரூராட்சி உதவி இயக்குனர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story