ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சாலை அமைக்கும் பணி மும்முரம்

தஞ்சாவூர்,
ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இருவழி ரெயில்பாதை
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாக தஞ்சை விளங்கி வருகிறது. தஞ்சை வழியாகத்தான் முன்பு அதிக அளவில் தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்- திருச்சி இடையிலான ரெயில்பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது தஞ்சை வழியாக சென்னைக்கும், தென்மாவட்டங்களுக்கும் குறைந்த அளவே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை- திருச்சி இடையே ஒருவழிப்பாதை என்பதால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ரெயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில் ரெயில்கள் 1 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள்.
எனவே தஞ்சை- திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு தஞ்சை- திருச்சி அருகே உள்ள பொன்மலை வரை இடையே 49 கிலோமீட்டர் தூரத்திற்கு இருவழி ரெயில்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து முதல்கட்டமாக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை அமைக்கும் பணி
இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் கட்டப்படுகின்றன.
தஞ்சை சிவாஜிநகரில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லின் எந்திரம் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு மணல், குப்பை மேடுகளை அகற்றி சமப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தஞ்சை வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story