இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது


இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:45 AM IST)
t-max-icont-min-icon

இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது

திருவாரூர்,

இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில துணை தலைவர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அடிப்படை ஊதியம் ரூ.5 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த 2016 ஜனவரி 1-ந் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன், வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், சங்க மாவட்ட துணை தலைவர் காசிநாதன், தட்சிணாமூர்த்தி, விஜயகுமார், மாவட்ட இணை செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

Next Story