நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மரத்தில் கார் மோதல்; 3 பேர் படுகாயம்


நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மரத்தில் கார் மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:45 AM IST)
t-max-icont-min-icon

நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மரத்தில் கார் மோதல்; 3 பேர் படுகாயம்

தென்தாமரைகுளம்,

கொட்டாரம் மிஷன் காம்பவுண்டை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 80). இவருடைய மனைவி காந்திமதி (75). சம்பவத்தன்று இருவரும் நாகர்கோவிலில் பொருட்கள் வாங்குவதற்காக காரில் புறப்பட்டனர். அப்போது ஜேக்கப்பின் பக்கத்து வீட்டை சேர்ந்த அருள் ஸ்டேன்லி மனைவி பெல்லா (31) என்பவர், பொருட்கள் வாங்க நானும் உங்களோடு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஜேக்கப் அவரையும் அழைத்து கொண்டு காரில் புறப்பட்டு சென்றார்.

ஈத்தங்காடு உசரவிளை விலக்கில் வந்த போது நாய் ஒன்று திடீரென காரின் குறுக்கே பாய்ந்தது. இதனால் நிலைதடுமாறிய கார், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் படுகாயமடைந்தனர். 3 பேரும் சிகிச்சைக்காக கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்துகுறித்து தென்தாமரைகுளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story