தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்


தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 2:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைந்து 16–ம் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க.வினர் நேற்று காலை மவுன ஊர்வலம் நடத்தினர்.

மவுன ஊர்வலம்


தமிழ்நாடு முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5–ந் தேதி இறந்தார். அவரின் 16–ம் நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று காலை மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு இருந்து தொடங்கியது. ஊர்வலத்துக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தின் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படம் வாகனத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது. அந்த வாகனத்தை சுற்றி சென்ற பெண்கள் அழுதபடி சென்றனர். ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு, குரூஸ்பர்னாந்து சிலை, பாலவிநாயகர் கோவில் தெரு வழியாக ஜெயராஜ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

யார்–யார்?


நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜ், மாநில இளைஞர் இளம்பெண் பாசறை துணை செயலாளர் சின்னதுரை, மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story