தூத்துக்குடியை சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

தூத்துக்குடி,
தூத்துக்குடியை சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
நாட்டுப்படகு
தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலனியை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. இவருடைய மகன் செல்வராஜ். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், அதே பகுதியை சேர்ந்த கிரிகோரி மகன் விக்டர்(வயது 44), விக்டர் மகன் அஜித்(21), பிச்சையா மகன் வினோத்(24), வில்பிரட் மகன் பிரவீன்(28), அமலன்(44), வெற்றிவேல்(30), லிபோ(44) ஆகிய 7 பேரும் கடந்த 16–ந் தேதி காலை 7 மணிக்கு திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். படகை விக்டர் ஓட்டி சென்றார். இவர்கள் தூண்டில் மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
சிறைபிடிப்பு
இவர்கள் நேற்று காலை 5–30 மணி அளவில் இலங்கை மன்னார் மாவட்டத்தில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தூத்துக்குடி மீனவர்களின் படகை சுற்றி வளைத்து பிடித்தனர். படகில் இருந்த 7 மீனவர்கள் மற்றும் படகை தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து 7 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மனு
இது குறித்து நேற்று மதியம் படகின் உரிமையாளர் செல்வராஜிக்கு தகவல் கிடைத்தது. இதனால் மீனவர்களின் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். தொடர்ந்து செல்வராஜ் மற்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Next Story