தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 2:51 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி,

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீன்பிடி இறங்குதளம் அமைந்து உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின்பேரில மீன்வளத்துறை சார்பில் கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.

மீனவர்கள் எதிர்ப்பு


மீன்வளத்துறை இணை இயக்குனர் ரீனாசெல்வி, உதவி இயக்குனர் பாலசரசுவதி, தூத்துக்குடி தாசில்தார் சங்கரநாராயணன், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு மீனவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திட்டமிட்டவாறு நடந்தது.

குடிசைகளும் அகற்றம்


கடற்கரையில் நல்ல நிலையில் உள்ள வல்லங்களை மீனவர்களே எடுத்து சென்றனர். பழைய சேதம் அடைந்த வல்லங்கள், ஐஸ்பெட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 6 பெட்டிக்கடைகள், 6 சிறிய குடிசைகளும் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story