தீக்குச்சி தொழிற்சாலையில் தீ விபத்து


தீக்குச்சி தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 22 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 2:51 AM IST)
t-max-icont-min-icon

தீக்குச்சி தொழிற்சாலையில் தீ விபத்து

கோவில்பட்டி,

கோவில்பட்டி– எட்டயபுரம் ரோட்டில் ஜனார்த்தனன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தொழிற்சாலை உள்ளது. இங்கு பெரிய மரத்தடிகளில் இருந்து தீக்குச்சிகள் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலை வளாகத்தில் மரக்கழிவுகளை குவியலாக தனியாக வைத்து இருந்தனர். நேற்று காலை 11.30 மணியளவில் மரக்கழிவுகளில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கோவில்பட்டி தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன், வருவாய் ஆய்வாளர் அப்பணராஜ், கிராம நிர்வாக அலுவலர் மாதவராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.


Next Story