செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் முற்றுகை 100 நாட்கள் முழுமையாக வேலை கேட்டு போராட்டம்


செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் முற்றுகை 100 நாட்கள் முழுமையாக வேலை கேட்டு போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:51 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் முற்றுகை 100 நாட்கள் முழுமையாக வேலை கேட்டு போராட்டம்

செங்கோட்டை,

செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது 100 நாட்கள் முழுமையாக வேலை கேட்டு போராட்டம் நடத்தினர்.

தேசிய ஊரக தொழிலாளர்கள்


தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் செங்கோட்டை நகரசபை, புதூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர் ஆகிய நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த தொழிலாளர்கள் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் முத்துசாமி, தாலுகா நிர்வாகி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய சங்க மாநில செயலாளர் மலைவிளைபாசி பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வேலுமயில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் பேசினர்.

தாசில்தாரிடம் மனு


தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் செங்கோட்டை தாசில்தார் முத்துவிநாயகத்திடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், தேசிய ஊரக திட்ட தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி


நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட ராஜாக்கள்மங்கலம், மருகால்குறிச்சி கிராம பகுதி தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் நாங்குநேரி யூனியன் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தேசிய ஊரக திட்ட தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story