வேளாண்துறை அலுவலகம் முன்பு வாரிசுதாரர்களுக்கு வேலைகேட்டு தர்ணா போராட்டம்
வாரிசு வேலை வழங்கக்கோரி வேளாண்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. தர்ணா போராட்டம் புதுவை அரசின் வேளாண்துறையில் பணியின்போது இறந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படாம
புதுச்சேரி,
வாரிசு வேலை வழங்கக்கோரி வேளாண்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
தர்ணா போராட்டம்புதுவை அரசின் வேளாண்துறையில் பணியின்போது இறந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துக்கொண்ட கோரிக்கையை நிறைவேற்றாமல் காலங்கடத்தி வருவதாக புதுச்சேரி வேளாண்துறை இறந்தோர் வாரிசுதாரர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வேளாண்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். தர்ணாவுக்கு புதுவை மாநில வேளாண்துறை தோட்டக்கலை ஊழியர் சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். வாரிசுதாரர் சங்க தலைவர் ரெனே முன்னிலை வகித்தார்.
கலந்துகொண்டவர்கள்போராட்டத்தை அரசு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சம்மந்தம் தொடங்கி வைத்தார். கவுரவ தலைவர் சேஷாச்சலம் வாழ்த்திப் பேசினார். தர்ணா போராட்டத்தில் கூட்டமைப்பு தலைவர் பாலகுமார் மற்றும் நிர்வாகிகள் தன்ராஜ், ஆறுமுகம், மலையாளத்தான், ஜெயகாந்தன், கதிர்வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.