சேலத்தில் சேமியா வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி ஒருவர் கைது
திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம். இவர், சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த பூபதிராஜன் என்பவரிடம் ரூ.9 லட்சத்திற்கு சேமியாவை கொள்முதல் செய்து அனுப்பி வைக்குமாறு ஆர்டர் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான சேமியா லோடுவை இவர் அனுப்பி வைக்கவ
திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம். இவர், சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த பூபதிராஜன் என்பவரிடம் ரூ.9 லட்சத்திற்கு சேமியாவை கொள்முதல் செய்து அனுப்பி வைக்குமாறு ஆர்டர் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான சேமியா லோடுவை இவர் அனுப்பி வைக்கவில்லை. இதனால் ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக பூபதிராஜன் மீது சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராமஜெயம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மோசடி புகார் குறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், ராமஜெயத்திடம் சேமியா வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக பூபதிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.