பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2016 3:05 AM IST (Updated: 22 Dec 2016 3:05 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை அறிவித்துள்ளது.

சென்னை,

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை அறிவித்துள்ளது.

சென்னை-எழும்பூர்

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

*சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில்(வண்டிஎண்: 06001). ஜனவரி 6-ந் தேதி எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

*நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் (06002). ஜனவரி 8-ந் தேதி நெல்லையிலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

நாகர்கோவில்-மங்களூர்

*நாகர்கோவில்-மங்களூர் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06029). ஜனவரி 15-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

* மங்களூர்-நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06030). ஜனவரி 16-ந் தேதி மங்களூரில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டு, இரவு 1.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story