மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தனியார் பஸ் நிறுவன ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தனியார் பஸ் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 22 Dec 2016 3:08 AM IST (Updated: 22 Dec 2016 3:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த செங்குன்றம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது 27). இவர், செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை அருகே உள்ள ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த செங்குன்றம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது 27). இவர், செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை அருகே உள்ள ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக சென்னை மாதவரம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு சீனிவாசன் நகர் 2-வது பிரதான சாலையில் அவர் வந்த போது எதிரே ராயப்பன் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக இந்த மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் படுகாயம் அடைந்த சிவகுமார், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். ராயப்பன் லேசான காயம் அடைந்தார். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

பலியான சிவகுமாருக்கு பானுப்பிரியா(24) என்ற மனைவியும், 3 மாதத்தில் சாக்‌ஷி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். 

Next Story