108 வைணவ திருத்தலங்களில் தொன்மையான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 8-ந்தேதி நடைபெறுகிறது
108 வைணவ திருத்தலங்களில் தொன்மையான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 8-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.
சென்னை,

வைகுண்ட ஏகாதசி
108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில் விளங்குகின்றது. இங்கு வைகுண்ட ஏகாதசி உற்சவம் அடுத்தாண்டு ஜனவரி 8-ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு சில ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
சிறப்பு ஏற்பாடுகள்
* கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பரமபதவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் அகன்ற எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படும்.
* பக்தர்களின் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் மற்றும் தெற்கு ரெயில்வே மூலம் சிறப்பு ரெயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும்.
* பக்தர்களின் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படும். கோவில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும்.
லட்டு பிரசாதம்
* கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கவும், கீதை சுலோகம், சாராம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
* கோவில் வரலாறு அடங்கிய சிற்றட்டை, ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு ஆகியவை வழங்கப்பட உள்ளது.
பரமபத வாசல் திறப்பு
8-ந்தேதி வைகுண்ட ஏகாதசி தினத்தன்று கோவில் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் முத்தங்கி சேவை (ரூ.300 டிக்கட் மற்றும் பேட்ஜ் உள்ளோர் கோவிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்). 2.45 மணி வரை உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம். 2.45 மணி முதல் 4 மணி வரை உற்சவர் வைர அங்கி சேவை.
அதிகாலை 4 மணிக்கு உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்திலிருந்து உள் புறப்பாடு. அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு, நம்மாழ்வாருக்கு காட்சி தருதல். 4.30 மணி முதல் 5 மணி வரை வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை, வேத திவ்யப்பிரபந்தம் தொடங்குதல்.
அதிகாலை 5 மணி முதல் 5.10 மணி வரை பரமபத வாசலில் உபயதாரர் மரியாதை மற்றும் தரிசனம்.
காலை 6.00 மணி முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.100 (பின்கோபுர வாசல் வழியாகவும்) மற்றும் கட்டணமின்றி பொது தரிசனம் முன் கோபுர வாசல் வழியாகச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மாலை 5.45 மணிக்கும், 11-ந்தேதி காலை 10 மணி மற்றும் 17-ந்தேதி காலை 9.30 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும்.
அமைச்சர் ஆய்வு
வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகளை சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மா.வீரசண்முகமணி, கோவில் இணை கமிஷனர் த.காவேரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story