அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு வங்கி கணக்கு தொழிலாளர் துறை நடத்திய சிறப்பு முகாமில் ஏற்பாடு


அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு வங்கி கணக்கு தொழிலாளர் துறை நடத்திய சிறப்பு முகாமில் ஏற்பாடு
x
தினத்தந்தி 22 Dec 2016 3:29 AM IST (Updated: 22 Dec 2016 3:29 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணியிடங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தொழிலாளர் துறை செயலாளர் பெ.அமுதா அறிவித்திருந்தார்.

சென்னை,

கட்டுமான பணியிடங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தொழிலாளர் துறை செயலாளர் பெ.அமுதா அறிவித்திருந்தார். அதன்படி வங்கிகளுடன், அரசு தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு துறை மற்றும் சுகாதார இயக்கம் இணைந்து கட்டுமான பணியிடங்களில் வங்கி கணக்கு தொடங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணியிடத்தில் உள்ள எல் அன்ட் டி நிறுவன மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான வங்கி கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை சென்னை மாவட்ட தொழிலாளர் துறை இணை கமிஷனர் கே.ரவிசங்கர் தொடங்கிவைத்தார். துணை கமிஷனர் ஊ.லட்சுமிகாந்தன், பாதுகாப்பு-சுகாதார துணை இயக்குனர் ஜெயக்குமார், தொழிலாளர் துறை அதிகாரி (சமூக பாதுகாப்பு திட்டம்) இல.கண்ணகி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முகாமில், கட்டுமான பணியாளர்களுக்கு தனிநபர் வங்கி கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேற்கண்ட தகவல்கள் தொழிலாளர் துறை அதிகாரி (சமூக பாதுகாப்பு திட்டம்) இல.கண்ணகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Next Story