மைசூரு டவுனில் பயங்கரம் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு; பெண் கத்தியால் குத்திக்கொலை தோழி கைது
மைசூரு டவுன் சாந்திநகரை சேர்ந்தவர் ஜாகீரா(வயது 38). உதயகிரி பகுதியை சேர்ந்தவர் சல்மா(35). 2 பேரும் தோழிகள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக சல்மாவுக்கும்,
மைசூரு,
மைசூரு டவுன் சாந்திநகரை சேர்ந்தவர் ஜாகீரா(வயது 38). உதயகிரி பகுதியை சேர்ந்தவர் சல்மா(35). 2 பேரும் தோழிகள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக சல்மாவுக்கும், ஜாகீராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது முன்விரோதமாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜாகீரா தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சல்மா, ஜாகீராவுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த சல்மா, தான் மறைத்து வைத்திருத்த கத்தியால் ஜாகீராவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ஜாகீரா, சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக செத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சல்மா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உதயகிரி போலீசார், ஜாகீராவின் வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணயில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் ஜாகீராவை, சல்மா குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனது வீட்டில் பதுங்கி இருந்த சல்மாவை கைது செய்தனர்.

Next Story