திருப்பத்தூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்


திருப்பத்தூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 6:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் நகர் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பள்ளிகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் முதலியவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்குகள் அட்டகாசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே குரங்குகள் சுற்றித்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் நகர் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பள்ளிகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் முதலியவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குரங்குகள் அட்டகாசம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே குரங்குகள் சுற்றித்திரிந்து வருகின்றன. திருப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் குரங்குகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. 1–வது வார்டில் உள்ள புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் தங்கி மாணவர்களுக்கும், அவ்வழியாகச் செல்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மதிய உணவு இடைவேளையின் போது சுற்றுச்சுவரைச் சுற்றிலும் 50–க்கும் மேற்பட்ட குரங்குகள் காணப்படுகிறது. அவை தங்களது குடும்ப குட்டிகளோடு பள்ளியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. மேலும் அவை பள்ளி மாணவர்கள் சாப்பிடும் போது, அவர்களை மிரட்டி உணவுகளை எடுத்து சென்றுவிடுகின்றனர். மேலும் சில மாணவர்களின் உணவை, பாத்திரங்களுடன் எடுத்து சென்றுவிடுகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் பள்ளி செல்கின்றனர். இதேபோன்று தான் திருப்பத்தூர் பகுதியில் உள்ள மற்ற பள்ளிகளிலும் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

நடவடிக்கை

இதேபோல் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்திலும் ஜன்னல் வழியாக உள்ளே நுழையும் குரங்குகளால் பணிகள் பாதிக்கப்படுகிறது. கடை வீதிகளில் வெளியில் தொங்கும் வாழை பழங்களை பறிக்க குரங்குகள் அதிகமாகத் தென்படுகிறது. அவற்றை விரட்டுவதற்கு கடைக்காரர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் குரங்குகள் சாலையோரத்தில் நின்று பயமுறுத்துவதால், சாலையை கடக்கும் போது சிலர் பயந்து ஒடி காயமடைந்துள்ளனர். பஸ் நிலைய உட்புற பகுதிகளிலும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளுக்குள்ளும் புகுந்து பால் பாக்கெட், காய்கறிகள் மற்றும் கையில் கிடைப்பதை தூக்கிச்சென்று விடுகின்றன. எனவே பேரூராட்சி நிர்வாகம் வனத்துறையினரிடம் முறையிட்டு நகரில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து, அவற்றை வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.


Next Story