கடலாடி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது


கடலாடி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 6:26 PM IST)
t-max-icont-min-icon

கடலாடி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கொலை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளது பி.கீரந்தை. இந்த ஊரைச்சேர்ந்தவர் சேதுராமன் மகன் சத்தியமூர்த்தி (வயது 38). இவருக்கு

ராமநாதபுரம்,

கடலாடி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளது பி.கீரந்தை. இந்த ஊரைச்சேர்ந்தவர் சேதுராமன் மகன் சத்தியமூர்த்தி (வயது 38). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த விவசாயி கணேசன்(46) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 24–ந்தேதி கணேசன் பண்ணந்தையை சேர்ந்த சேதுபதி என்பவரின் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சுடுகாட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த சத்தியமூர்த்தி உள்பட 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கணேசனை சரமாரியாக வெட்டி கொலை செய்து தலையை துண்டாக வெட்டி போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேசனின் மாமனார் மாப்பிள்ளைசாமி அளித்த புகாரின் அடிப்படையில் சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

கடந்த 1992–ம் ஆண்டு கீரந்தையை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரை கொலை செய்ததற்கு பழிதீர்க்கும் வகையில் கடந்த 2001–ம் ஆண்டு ஆகஸ்டு 9–ந்தேதி சிக்கல் பஸ் நிலைய பகுதியில் திருவரங்கையை சேர்ந்த சண்முகம் மகன் கணேசபாண்டியன் என்பவரை வெட்டியும், வெடிகுண்டு வீசியும் கொலை செய்த வழக்கில் சத்தியமூர்த்தி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது

இதுதவிர மேலும் பல வழக்குகள் இவர் மீது உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் நடராஜன், வாலிபர் சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தியை சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.


Next Story