டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 6:27 PM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் என்மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட உச்சிப்புளி கடைவீதியில

பனைக்குளம்,

உச்சிப்புளி கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் என்மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட உச்சிப்புளி கடைவீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை இடம் மாற்றக்கோரி கடந்த ஜூலை மாதம் 27–ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ்மாக் அதிகாரிகள், மண்டல துணை தாசில்தார், கோட்ட ஆய அலுவலர், உச்சிப்புளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், மண்டபம் வருவாய் ஆய்வாளர், என்மனங்கொண்டான் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் விரைவில் இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்து 4 மாதங்களுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட கடையை அந்த இடத்தில் இருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் நேற்று உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். முனியசாமி, கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வலியுறுத்தல்

மாவட்ட செயலாளர் காசிநாததுரை, தாலுகா செயலாளர் ராஜ்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கல்யாணசுந்தரம், உச்சிப்புளி வர்த்தக சங்க தலைவர் அசரியா, செயலாளர் வேணுகோபால், பொருளாளர் ராமச்சந்திரன், தாலுகா குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மாதர் சங்க தாலுகா செயலாளர் மாலதி, வாலிபர் சங்க தாலுகா செயலாளர் சத்தியேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சாத்தக்கோன்வலசை அழகுடையான், நொச்சியூருணி பெரியகருப்பன், அரங்கன்வலசை சந்திரன், சாத்தக்கோன்வலசை பரமேசுவரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story